சினிமா

தலைவனை பார்க்காமலே போறேனே! விஜய் ரசிகர் எடுத்த விபரீத முடிவு! அதையும் விமர்சித்து வாங்கி கட்டிக்கொண்ட மீராமிதுன்!!

Summary:

Meera mithun tweet about vijay fan suicide

தமிழ் சினிமாவில் ஏராளமான மாஸ், ஹிட் திரைப்படங்களில் நடித்து தற்போது உச்ச நட்சத்திரமாக கொடிகட்டி பறப்பவர் தளபதி விஜய்.  இவருக்கென உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும் இவரது திரைப்படங்கள் மற்றும் பிறந்தநாளை ரசிகர்கள் திருவிழாக்களை போல கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். மேலும் அவர் குறித்த அப்டேட்டுகள் வெளிவந்தால் அதனை உலகளவில் டிரெண்டாகியும்  வருகின்றனர். 

இந்நிலையில் விஜய்யின் ரசிகர் பாலா என்பவர் சமீபத்தில் தலைவன் படத்தையும், தலைவனையும் பார்க்காமலே போகிறேன் என டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுவிட்டு தற்கொலை கொண்டுள்ளார். மேலும் அதனை நடிகர் விஜய்க்கு டேக் செய்து லவ் யூ தலைவா எனவும் குறிப்பிட்டுள்ளார். 

இதனை அறிந்த ரசிகர்கள் பலரும் பேரதிர்ச்சி அடைந்தனர். மேலும் தனக்கு காதல் தோல்வி இல்லை என்றும், குடும்ப பிரச்சினை எல்லோரும் வெறுக்கின்றனர் எனவும் அந்த நபர் மற்றொரு பதிவில் கூறியுள்ளார்.

இந்நிலையில் சமீபகாலமாக விஜய் குறித்து, தரக்குறைவாகவும் அவதூறாகவும் பேசி மோசமான  வீடியோக்களை வெளியிட்டு வரும் மீரா மிதுன் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ஹீரோக்களை திரையில் மட்டும் கொண்டாடுங்கள். மற்ற நேரங்களில் உங்களது குடும்பத்தை கவனித்துக் கொள்ளுங்கள். அதைவிட்டுவிட்டு 24 மணி நேரமும் நடிகரின் பெயரையே முழங்கிகொண்டிருந்தால் உங்களது குடும்பமே உங்களை வெறுக்கும். இப்பொழுது நடிகர் விஜய்யா வந்து உங்களது குடும்பத்திற்கு சாப்பாடு போட போகிறார் என கூறியுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் பலரும் கடுப்பாகி அவருக்கு பதிலளித்து வருகின்றனர்.

 


Advertisement