பிக்பாஸிலிருந்து வெளியேற்றப்பட்ட சனம்! செம ஹேப்பியில் மோசமாக மீரா மிதுன் செய்துள்ள காரியத்தை பார்த்தீர்களா!

பிக்பாஸிலிருந்து வெளியேற்றப்பட்ட சனம்! செம ஹேப்பியில் மோசமாக மீரா மிதுன் செய்துள்ள காரியத்தை பார்த்தீர்களா!


meera-mithun-tweet-about-sanam-eviction

விஜய் தொலைக்காட்சியில் 16  போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 61 நாட்களை கடந்து வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கிறது. மேலும் முந்தைய சீசன்களை போல இந்த சீசனிலும் சண்டை, சமாதானம், அழுகை என விறுவிறுப்பாகவும், காரசாரமாகவும் உள்ளது

இந்த சீசனில் இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா ஆகிய 5 பேர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் வார இறுதியான நேற்று ஆரி, அனிதா, சனம், நிஷா, ரம்யா, ஆஜித், ஷிவானி ஆகிய 7 பேரும் நாமினேட் செய்யப்பட்டிருந்த நிலையில் சனம் குறைந்த வாக்குகளை பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.
இதனால் போட்டியாளர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 3ன் போட்டியாளரும், சர்ச்சைக்கு பெயர் போனவருமான மீரா மிதுன் இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், கடைசியாக நேற்று இரவு ஒரு மகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து டுபாக்கூர் வெளியேறிவிட்டார். வெளியில் வந்து டுபாக்கூர் கம்பெனிகளுக்கு டுபாக்கூர் ஷோக்களை செய். வாழ்த்துகள் டுபாக்கூர் என பதிவிட்டுள்ளார். 

மேலும் தொடர்ந்து மீரா மிதுன், இந்த பூமியிலேயே தற்போது தர்ஷன்தான்  மிகவும் மகிழ்ச்சியானவராக இருப்பார். ஏனெனில் அவரது முன்னாள் காதலியின் குணம் என்னவென தற்போது முழுவதும் வெளியாகிவிட்டது. விஜய் டிவி மற்றும் பிக்பாஸ் ரொம்ப நல்ல வேலையை செய்துள்ளீர்கள். அம்புலி நாயகன் சொர்க்கத்திலிருந்து சிரித்துக் கொண்டிருப்பார், டுபாக்கூர் எப்போதும் டுபாக்கூர் தான் எனவும் பதிவிட்டுள்ளார்.