சினிமா

வனிதாவுடன் பிரச்னையை தொடங்கிய மீரா மிதுன்.! சபாஷ் சரியான போட்டி..! அனல்பறக்கும் இணையதளம்.!

Summary:

Meera mithun social media fight with vanitha

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மீரா மிதுன். பிக்பாஸ் வீட்டில் இருந்த போதும் சரி பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பிறகும் சரி இவரது செயல்பாடுகள் ரசிகர்கள் மத்தியில் பல்வேறு விமர்சனங்களை உருவாக்கி வருகிறது. 

சமீபத்தில்கூட பிரபல நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யாவின் மனைவிகள் சங்கீதா மற்றும் ஜோதிகாவை இவர் தரக்குறைவாக பேசி வெளியான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பல்வேறு ரசிகர்களின் கண்டனத்திற்கு உள்ளானது.

வெளியில் வந்த உடனே மீரா மிதுன் என்ன ...

மீரா மிதுன் பேசிய வார்த்தைகளை சகிக்க முடியாமல் இயக்குனர் பாரதிராஜா மற்றும் நடிகர் விவேக் போன்ற தமிழ் சினிமா பிரபலங்களும் தங்கள் கண்டனத்தை தெரிவித்து இருந்தனர். பிக்பாஸ் புகழ் வனிதா விஜயகுமார் மீரா மிதுன் நடவடிக்கைகளை எதிர்த்து தனது கண்டனத்தை தெரிவித்து இருந்தார்.

இதனால் தற்போது தனது கவனத்தை வனிதா மீது திருப்பியுள்ளார் மீரா மீது. இது குறித்து வனிதாவுக்கு பதிலளித்துள்ள மீரா, "வனிதா நீங்களும் ஒரு நெப்போட்டிசம் பிராடக்ட்தான். வெளியில் உள்ளவர்களிடம் நான் நடத்தும் போரை உங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது.பிக்பாஸ் வீட்டில் எல்லா பெண்களையும் உங்கள் சேர்த்துக்கொண்டு என்னை ரேக்கிங் செய்தீர்கள் ஆனால், நான் நல்லவள் என பின்னர் புரிந்து கொண்டீர்கள். என் புகழை உங்களால் ஏன் ஏற்க முடியவில்லை. ஈகோவா?' என வனிதாவை வம்பிக்கு இழுத்துள்ளார்."


Advertisement