நாளுக்கு நாள் கூடும் மீராமிதுனின் கவர்ச்சி.! படவாய்ப்புக்காக இப்படியா? வச்சு செய்யும் நெட்டிசன்கள்.! புகைப்படம் இதோ..



meera-mithun-glamour-photo-viral

தமிழ் சினிமாவில் தானா சேர்ந்த கூட்டம், 8 தோட்டாக்கள் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் மீரா மிதுன்.  மாடலிங் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர், மிஸ் இந்தியா மிஸ் தமிழ்நாடு உட்பட பல அழகி பட்டங்களை பெற்றுள்ளார். மீரா மிதுன் தொடர்ந்து பல சர்ச்சையில் சிக்கி வருபவர். இவர் பல பெண்களிடம் அழகுப்போட்டி நடத்துவதாக கூறி பணத்தை கொள்ளை அடித்ததாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளது.

இந்நிலையில் மீரா மிதுன் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டிற்குள்ளேயே பல பிரச்சினைகளை எழுப்பிய மீரா சேரன் மீது தவறான அவதூறு ஒன்றை கிளப்பினார். பின்னர் குறைந்த வாக்குகளை பெற்று போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். 

Meera mithun

அதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய அவர் மீது கொலைமிரட்டல் விடுத்ததாக வழக்குபதிவு செய்த நிலையில் அவர் மிக ஆவேசமாக ஊடங்களுக்கு பேட்டியளித்தார்.
மேலும் கவர்ச்சி புகைப்படங்களையும் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் அவர் சமீபத்தில் மிக மோசமான கவர்ச்சி போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அதனை கண்ட நெட்டிசன்கள் படவாய்ப்புக்காக இப்படியா என மோசமாக விளாசி வருகின்றனர்.

Meera mithun