சினிமா

இதுதான் உங்களுக்கு கடைசி வார்னிங்! நடிகை த்ரிஷாவிற்கு மிரட்டலான எச்சரிக்கை விடுத்த மீரா மிதுன்! ஏன் தெரியுமா?

Summary:

Meera mithun gave warning to trisha

தமிழ் சினிமாவில் 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட சில படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து இருந்தவர் மாடல் அழகியான மீரா மிதுன். எந்த நிகழ்ச்சியில் பங்கேற்றாலும் சர்ச்சையைக் கிளப்பி வந்த மீரா மிதுன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனிலும் கலந்து கொண்டார்.

இந்நிலையில் அவர் பிக்பாஸ் வீட்டில் இயக்குனர் சேரன் மீது, தவறான கருத்துக்களை கூறி அவதூறு பரப்பினார். அதனால் இவருக்கு சமூக வலைதளத்தில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின.  இந்நிலையில்  எப்போதும் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் மீரா மிதுன், அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். அதுமட்டுமின்றி அவ்வப்போது  பிரபல நடிகைகளை வம்பிற்கு இழுத்தும் பதிவுகளை வெளியிட்டு வருகிறார். 

இந்நிலையில் தமிழ் சினிமாவின்  முன்னணி நடிகையான நடிகை திரிஷா சமீபத்தில் செல்ஃபி புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதளபக்கத்தில் வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் வைரலானது. இந்நிலையில் மீராமிதுன் நடிகை திரிஷாவிற்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  

அதில் திரிஷா இதுதான் உங்களுக்கு கடைசி எச்சரிக்கை. அடுத்த முறை நீங்கள் உங்களுடைய புகைப்படத்தை போட்டோஷாப் செய்து,  என்னை போலவே ஹேர்ஸ்டைல், உடல் தோற்றம் போன்றவற்றை மார்பிங் செய்து புகைப்படங்களை வெளியிட்டால் நான் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது உங்களுக்கு தெரியும். உங்கள் மனசாட்சிக்கு தெரியும். வளருங்கள்.  வாழ்க்கையை தேடி கொள்ளுங்கள் என பதிவிட்டுள்ளார். இதனைக் கண்ட ரசிகர்கள் மீரா மிதுனை  மோசமாக கிண்டல் செய்து விமர்சனம் செய்து வருகின்றனர்.


Advertisement