லீக்கான கொலை மிரட்டல் வீடியோ.! செம ஆவேசமாக பதிலடி கொடுத்து மீரா மிதுன் கூறியுள்ளதை பார்த்தீர்களா!!

லீக்கான கொலை மிரட்டல் வீடியோ.! செம ஆவேசமாக பதிலடி கொடுத்து மீரா மிதுன் கூறியுள்ளதை பார்த்தீர்களா!!


meera-midun-talk-about-blackmail-audio

தமிழ் சினிமாவில் தானா சேர்ந்த கூட்டம், 8 தோட்டாக்கள் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் மீரா மிதுன்.  மாடலிங் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர், மிஸ் இந்தியா மிஸ் தமிழ்நாடு உட்பட பல அழகி பட்டங்களை பெற்றுள்ளார். மீரா மிதுன் தொடர்ந்து பல சர்ச்சையில் சிக்கி வருபவர். இவர் பல பெண்களிடம் அழகுப்போட்டி நடத்துவதாக கூறி பணத்தை கொள்ளை அடித்ததாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளது.

இந்நிலையில் மீரா மிதுன் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து பல பிரச்சினைகளை எழுப்பிய அவர் குறைந்த வாக்குகளை பெற்று போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். 

 

Meera mithun

இந்நிலையில் மீராவிற்கு  கடந்த இரு வருடங்களுக்கு முன்பு எழும்பூர் சேர்ந்த ஜோமைக்கேல் என்ற தொழிலதிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில் அவர்கள் இருவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பண பிரச்சினை ஏற்பட்டுள்ளது அதனால் இருவரும் தொடர்ந்து போலீசாரிடம் புகார் அளித்து வந்தனர். 

இந்நிலையில் சமீபத்தில் மீராமிதுன் ஜோ மைக்கேலுக்கு கொலை மிரட்டல் விடுத்து பேசிய செல்போன் ஆடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. இது தொடர்பாக மைக்கேல் போலீசாரிடம் புகார் அளித்த நிலையில் மீரா மிதுன் மீது இருபிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Meera mithun

இதனை தொடர்ந்து இதுகுறித்து செய்தியாளர்களிடம் மீரா மிதுன் ஆவேசமாக கூறுகையில், என்னை பார்த்தால் கூலிப்படை வைத்தவர் போலவே தெரிகிறது. நான் பேசியதை டப் செய்து போட்டிருக்கலாம். மேலும் ஒரு பெண்ணை பற்றி இப்படியா பேசுவது. நான் இதையெல்லாம் பார்த்து மனஅழுத்ததில் தற்கொலை பண்ணியிருந்தால் என்ன செய்வீர்கள்.

தினமும் என அம்மாவுக்கு போன் செய்து மிரட்டுகின்றனர். வீட்டிற்கும் ரவுடிகளை அனுப்புகின்றனர். என்னோட குடும்பத்துக்கு எதாவது ஒன்னுனா இத்தனை நாள் இருந்தது போல இனி விடமாட்டேன் என பேசியுள்ளார்.