சினிமா

கீர்த்தி சுரேஷ்க்கு நடிகை மீனா விடுத்த அசத்தலான சவால்! என்னென்னு பார்த்தீங்களா!!

Summary:

நடிகை மீனா, கீர்த்தி சுரேஷ்க்கு மரம் நடும் சவாலை விடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் 90களில் ரஜினி, கமல், சரத்குமார், விஜயகாந்த் என பல உச்ச பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்து ஏராளமான  திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் நடிகை மீனா. அவர் தற்போது பல படங்களில் முக்கிய துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மேலும் நடிகை மீனா தற்போது ரஜினி நடிப்பில் உருவாகிவரும் அண்ணாத்த திரைப்படத்திலும் நடித்து வருகிறார். அந்த நிலையில் சமூக வலைதளங்களில் அவ்வப்போது வித்தியாசமான புதிய சவால்கள் விடுவது வழக்கம். மேலும் தற்போது திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் மரம் நடுவதை சவாலாக எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகை மீனாவும் இந்த சவாலை ஏற்று மரம் நட்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில்  வெளியிட்டுள்ளார். மேலும் அந்த சவாலை நடிகை மீனா தொடர்ந்து நடிகைகள் மஞ்சு வாரியார், கீர்த்தி சுரேஷ் மற்றும் சில நடிகர்களுக்கு விடுத்துள்ளார். 


Advertisement