எதற்காக தற்கொலை முயற்சி செய்தேன் தெரியுமா?? வாயை திறந்த மதுமிதா! - TamilSpark
TamilSpark Logo
சினிமா

எதற்காக தற்கொலை முயற்சி செய்தேன் தெரியுமா?? வாயை திறந்த மதுமிதா!


பிக்பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. முக்கோண காதல் கதை, வணிதான் ரீ என்ட்ரிக்கு பிறகு பிக்பாஸ் வீட்டில் நடக்கும் சண்டை என பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நகர்கிறது. தற்போது பிக்பாஸ் இல்லத்தில் ஆண்கள் ஒரு அணியாகவும், பெண்கள் ஒரு அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர்.

இதில் நேற்றைய நிகழ்ச்சியில் இரு அணிகளும் மாறி மாறி சண்டை போட ஆண்கள் பக்கம் லாஷ்லியாவும், பெண்கள் பக்கம் சேரனும் சேர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் லாஷ்லியா மதுமிதாவை திட்டினார்.

இந்நிலையில் மதுமிதா பிக்பாஸ் வீட்டில் தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்ததாக தகவல் வெளியானது. நடிகை மதுமிதா தற்கொலை முயற்சி மேற்கொண்டதால், பிக்பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். 

தான் ஏன் தற்கொலை முயற்சி செய்தேன் என மதுமிதா கூறுகையில், நான் தைரியமான பெண் என் தைரியம் எந்த அளவிற்கு சோதிக்கப்பட்டிருந்தால் நான் இந்த முடிவுக்கு வந்திருப்பேன்!!.

நான் என் கருத்தை அங்கு வெளிப்படுத்தினேன், ஆனால் என்னை இழிவாகவும், கீழ்தரமாகவும் பேசி என்னை முட்டாள் என்றார்கள். கடைசியில் யார் முட்டாள் என்று தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக இப்படி செய்தேன் என கூறியுள்ளார்.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo