சினிமா

போட்டியாளர்களை ஏமாற்றிய மாஸ்டர் செஃப்.! உண்மையை போட்டுடைத்த போட்டியாளர்கள்.!

Summary:

போட்டியாளர்களை ஏமாற்றிய மாஸ்டர் செஃப்.! உண்மையை போட்டுடைத்த போட்டியாளர்கள்.!

சன் டிவியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சி தான் மாஸ்டர் செஃப். இது சமையல் போட்டிக்கான நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக களமிறங்கி இருந்தார் நடிகர் விஜய் சேதுபதி. ஹரிஷ், ஆர்த்தி, கௌஷிக் என 3 பேர் நடுவர்களாக நிகழ்ச்சியை கொண்டு சென்றார்கள்.

மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் 14 போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள். பின் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு பல டாஸ்குகள் கொடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 4 போட்டியாளர்கள் மட்டும் பைனலுக்கு சென்று இருந்தார்கள். இறுதி போட்டியில் வின்னி, நித்தியா, தேவகி மற்றும் கிருத்திகா என 4 பேர் பைனலிஸ்ட்டாக தேர்வாகி இருந்தனர். இந்த நான்கு பேரில் தேவகி தான் முதல் இடத்தை பிடித்து வெற்றி பெற்றார். 

இதன் 2ம் பாகம் வருமா என ரசிகர்கள் எதிர்ப்பார்க்கும் நிலையில் முதல் சீசன் போட்டியாளர்கள் சிலர் புகார் எழுப்பியுள்ளனர். அதாவது இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களுக்கு அவர்கள் தரப்பில் செய்த போக்குவரத்து உள்ளிட்ட செலவுகளை திருப்பி அளிப்பதாக நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு மாஸ்டர் செஃப் குழுவினர் வாக்குறுதி தந்து இருந்ததாகவும், ஆனால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இதுவரை சொன்னபடி பணம் தரவில்லை என கூறி போட்டியாளர்கள் சிலர் சமூக வலைதளங்களில் இந்த விஷயத்தை கூறி புலம்பி வருகிறார்கள். 

அடுத்த சீசனில் எங்களை போன்று யாரும் ஏமாற கூடாது என சமூக வலைத்தளங்கள் மூலமாக போட்டியாளர்கள் பேசி வருகிறார்கள். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.


Advertisement