முடிந்தது மாஸ்டர் படப்பிடிப்பு.. அன்பு முத்தத்துடன் விடைபெற்ற விஜய் - விஜய் சேதுபதி! வைரல் புகைப்படம்Master wrap up vijay sethupathi kissing vijay

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவுற்றன.

மாஸ்டர் படததில்  விஜய் பேராசிரியராக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனும் வில்லனாக விஜய் சேதுபதியும் நடிக்கின்றனர். மேலும் இவர்களுடன் நடிகர்கள் சாந்தனு, ஆண்ட்ரியா ஆகியோர் நடிக்கின்றனர்.

master

இந்த படத்தின் முக்கிய காட்சிகள் நெய்வேலியில் படமாக்கப்பட்டது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ளன. மேலும் டீசர் விரைவில் வெளியாகும் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கடைசி நாள் படப்பிடிப்பு முடிந்து விடைபெற்ற நடிகர் விஜய்க்கு விஜய் சேதுபதி முத்தம் கொடுத்துள்ள புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தினை கண்ட ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.