சினிமா

வந்துட்டேனு சொல்லு... இன்று மாலை 6 மணிக்கு.. விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கு மாஸ் அப்டேட்...

Summary:

மாஸ்டர் படத்தின் முக்கிய அறிவிப்பு குறித்து இன்று மாலை 6 மணிக்கு அப்டேட் வர இருப்பதாக படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

மாஸ்டர் படத்தின் முக்கிய அறிவிப்பு குறித்து இன்று மாலை 6 மணிக்கு அப்டேட் வர இருப்பதாக படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் நடிப்பில் உருவாகியுள்ளது மாஸ்டர் திரைப்படம். படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருந்தநிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக படம் வெளியாகாமல் தள்ளிப்போனது.

இந்நிலையில் மாஸ்டர் படம் OTT தளத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டநிலையில் படத்தை திரையரங்கில்தான் வெளியிடுவோம் என படக்குழு உறுதியாக இருந்தது. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளதால் மாஸ்டர் படம் வரும் தீபாவளிக்கு வெளியாகலாம் என கூறப்பட்டது.

ஆனால் திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அரசு அனுமதி வழங்கியுள்ளநிலையில் மாஸ்டர் படம் தீபாவளிக்கு வெளியாக வாய்ப்பு இல்லை என படத்தின் தயாரிப்பாளர் கூறியிருந்தார். சரி படம்தான் வரல, படத்தின் டீசர், ட்ரைலராவது வரும் என்று பார்த்தால், படம் வெளியாகும் தேதி முடிவு செய்யப்படாமல் ட்ரைலர், டீசர் வெளிவராது என படத்தின் இயக்குனரும் கூறிவிட்டார்.

சரி, எப்போதான் எங்களுக்கு மாஸ்டர் படத்தின் அப்டேட் குடுப்பிங்க என ரசிகர்கள் தொடர்ந்து கேட்டுவந்தநிலையில் மாஸ்டர் படத்தின் அப்டேட் குறித்து இன்று மாலை 6 மணிக்கு அறிவிப்பதாக படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் #MasterUpdate எனும் ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்...


Advertisement