சினிமா

மாஸ்டர் படத்தின் புது அப்டேட் வந்தாச்சு... தீபாவளி அன்னைக்கு ரசிகர்களுக்கு செம ட்ரீட் காத்திருக்கு

Summary:

விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் டீசர் வரும் தீபாவளி அன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் டீசர் வரும் தீபாவளி அன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் கொரோனா காரணமாக வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் 50% இருக்கைகளுக்கு மட்டுமே தமிழக அரசு அனுமதி வழங்கி இருப்பதால் மாஸ்டர் படம் வெளியாவதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் படத்தின் அப்டேட் குறித்து ரசிகர்கள் இயக்குனரிடம் கேட்டுவந்தநிலையில் இன்று மாலை 6 மணிக்கு மாஸ்டர் படம் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட இருப்பதாக படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு அவர் வெளியிட்டுள்ள பதிவில், வரும் தீபாவளி அன்று அதாவது நவம்பர் 14 ஆம் தேதி மாலை 6 மணிக்கு மாஸ்டர் படத்தின் டீசர் வெளியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

நீண்ட நாட்களாக மாஸ்டர் படத்தின் அப்டேட்டிற்காக காத்திருக்கும் ரசிகர்கர்களுக்கு இந்த தகவல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...


Advertisement