மாஸ்டர் படத்தின் வெற்றிக் கொண்டாட்டம்! செம ஹாப்பியாக படக்குழுவினர் எங்கு சென்றுள்ளனர் பார்த்தீர்களா!!

மாஸ்டர் படத்தின் வெற்றிக் கொண்டாட்டம்! செம ஹாப்பியாக படக்குழுவினர் எங்கு சென்றுள்ளனர் பார்த்தீர்களா!!


master-movie-team-celebrate-success-party

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படம் ஜனவரி 14 வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது .இப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி மற்றும் ஆண்ட்ரியா, மாளவிகா மோகன், மகேந்திரன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், ஸ்ரீமன், சஞ்சீவ் உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

மாஸ்டர் படப்பிடிப்பு முடிவடைந்ததும் கொரோனா பிரச்சனையால் ரிலீஸாவது தள்ளிப்போய் கொண்டிருந்த நிலையில், ஒருவழியாக பொங்கல் தினத்தை முன்னிட்டு படம் அனைத்து தியேட்டர்களிலும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. மேலும் வசூல் சாதனையும் குவித்தது. 

    master

இந்த நிலையில் மாஸ்டர் படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் தயாரிப்பாளர்கள் அனைவரும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர். இந்நிலையில் அங்கு எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

     master