சினிமா

மாஸ்டர் படம் பாதியில் நிறுத்தம்.. படம் பார்க்க சென்ற விஜய் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி..

Summary:

மாஸ்டர் திரைப்படம் பாதியில் நிறுத்தப்பட்டதால் மாஸ்டர் படம் பார்க்க சென்ற விஜய் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

மாஸ்டர் திரைப்படம் பாதியில் நிறுத்தப்பட்டதால் மாஸ்டர் படம் பார்க்க சென்ற விஜய் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நேற்று வெளியாகி வெற்றிநடைபோட்டுக்கொண்டிருக்கிறது மாஸ்டர் திரைப்படம். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமே வெளியாகவேண்டிய மாஸ்டர் திரைப்படம் கொரோனா ஊரடங்கு காரணமாக தற்போது வெளியாகியுள்ளது.

மேலும் கொரோனா காரணமாக திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இருப்பினும் மாஸ்டர் படத்தை காண்பதற்காக திரையரங்குகளில் விஜய் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக கூறிவருகின்றனர். இந்நிலையில் காரைக்காலில் 2 தியேட்டர்களில் மாஸ்டர் திரைப்படம் திரையிடப்பட்டுவந்தநிலையில் முருகராமு என்ற திரையரங்கில் காலை 6 மணி காட்சியை காண விஜய் ரசிகர்கள் கூட்டமாக திரண்டனர்.

படம் 6 மணிக்கு திரையிடப்பட்டநிலையில் இடைவெளிக்கு பிறகு சிறிது நேரம் கழித்து திரைப்படம் நிற்கவே ரசிகர்கள் கோபமாக ரகளையில் ஈடுபட தொடங்கினர். தொழிநுட்ப பிரச்சனை எனவும், விரைவில் பிரச்சனை சரிசெய்யப்படும் என நிர்வாகம் தெரிவித்தனை அடுத்து ரசிகர்கள் அமைதியாக காத்திருந்தனர். ஆனால் நீண்ட நேரமாகியும் பிரச்சனை சரி செய்யப்படாததால் ரசிகர்கள் மீண்டும் ரகளையில் ஈடுபட தொடங்கினர்.

இதனால் பிரச்சனை ஏற்படாமல் இருக்க, படத்தை பாதியில் நிறுத்திவிட்டு, பாதி தொகையை திரும்ப கொடுத்து ரசிகர்களை திரையரங்க நிர்வாகம் வெளியேற்றியது. இதனால் படம் பார்க்க சென்ற விஜய் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.


Advertisement