50% இருக்கைதான்.. ஆனாலும் மாஸ்டர் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.?

50% இருக்கைதான்.. ஆனாலும் மாஸ்டர் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.?


Master movie box office collection Day 1

மாஸ்டர் திரைப்படம் நேற்று வெளியானநிலையில் அதன் முதல் நாள் சென்னை வசூல் எவ்வளவு என்பது குறித்த செய்திகள் தற்போது வெளியாகியுள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் உருவான மாஸ்டர் திரைப்படம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாக இருந்தநிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக படம் வெளியாவது தாமதமாகி தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று வெளியானது.

Master movie

கொரோனா காரணமாக 50% சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளநிலையில்  நேற்று வெளியான மாஸ்டர் திரைப்படம் வசூலில் சாதனை படைத்துள்ளது. படம் வெளியான முதல் நாளான நேற்று மட்டும் மாஸ்டர் திரைப்படம் சென்னையில் மட்டும் சுமார் 1 . 21 கோடி வசூல் செய்துள்ளதாக வர்த்தக ஆய்வாளர் Kaushik LM தெரிவித்துள்ளார்.

மாஸ்டர் திரைப்படம் தமிழகத்தில் ஒரு அற்புதமான துவக்கத்தை கொடுத்துள்ளது எனவும், முதல் 4 தொடக்க நாள் வசூலில் ஒரு இடத்தைப் பிடிக்க முடிந்தது எனவும்,  விஜய்யின் சர்க்கார், பிகில் மற்றும் மெர்சல் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறைந்த அளவிலான இருக்கைகளுக்கு மட்டுமே அரசு அனுமதி வழங்கி இருந்தும், மாஸ்டர் படம் வசூலில் பட்டையை கிளப்பியுள்ளது.