சினிமா

மார்ச் 15ல் மாஸ்டர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா! பிரபல தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு

Summary:

Master movie audio launch live telecast at sun tv

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வரும் மார்ச் 15 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய் பாடிய குட்டி ஸ்டோரி பாடல் ஏற்கனவே வெளியாகி மிகவும் பிரபலமடைந்துள்ளது. இந்நிலையில் அனிருத் இசையில் உருவாகியுள்ள மற்ற பாடல்கள் வரும் மார்ச் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

மேலும் இந்த இசை வெளியீட்டு விழாவினை சன் தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்புகிறது. இந்த உற்சாகமான தகவலை சன் டிவி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.


Advertisement