சினிமா

தலைவா நீங்க கெத்துதான்.. 2 நாளில் மாஸ்டர் படத்தின் வசூல் இத்தனை கோடியா..? அடேங்கப்பா..

Summary:

மாஸ்டர் படத்தின் இரண்டு நாள் வசூல் நிலவரம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

மாஸ்டர் படத்தின் இரண்டு நாள் வசூல் நிலவரம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான மாஸ்டர் திரைப்படம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாக இருந்தநிலையில் கொரோனா காரணமாக படம் வெளியாவது தாமதமாகி தற்போது பொங்கலை முன்னிட்டு படம் கடந்த 13 ஆம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

கொரோனா காரணமாக தமிழகத்தில் உள்ள திரையரங்களுக்களில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளநிலையில் மாஸ்டர் படம் எதிர்பார்த்த அளவு ஓடுமா? வசூல் நடக்குமா என படத்தின் தயாரிப்பாளர், திரையரங்கு உரிமையாளர்கள், ரசிகர்கள் என அனைவர் மத்தியிலும் கேள்வி எழுந்தது.

இந்நிலையில் மாஸ்டர் படம் வெளியாகி ரசிகர்களின் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதை அடுத்து , இந்த படம் இரண்டு நாட்களில் சுமார் 43 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. படம் வெளியான முதல் நாள் அன்று சென்னையில் மட்டும் மாஸ்டர் படம் ரூ.1.21 கோடியும், இரண்டாவது நாளில் ரூ.1.05 கோடியும் வசூல் ஆகியுள்ளது.

அதேபோல் 2 நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ.43 கோடியை வசூலித்து மாஸ்டர் திரைப்படம் சாதனை படைத்துள்ளது. இந்த வசூல் நிலவரம் திரையரங்கு உரிமையாளர்களுக்கு சற்று ஆறுதல் அளிப்பதாக கூறப்படுகிறது.


Advertisement