சினிமா

அனிருத் பர்த்டே ஸ்பெஷல்! ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம ட்ரீட்! மாஸ்டர் படக்குழு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!

Summary:

அனிருத் பிறந்தநாளை முன்னிட்டு மாஸ்டர் படத்தின் quit pannuda என்ற பாடலில் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிடவுள்ளது.

தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளிவந்த 3 என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக பிரபலமானவர் அனிருத். அதனை தொடர்ந்து அவர் பல படங்களில் தனது அசத்தலான ஹிட்  இசையால் ஏராளமான ரசிகர் பட்டாளத்தையே பெற்றுள்ளார். 

இவ்வாறு வெற்றி நிறைந்த இளம் இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் கொரோனா ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் எதுவும் திறக்கப்படாத நிலையில் ரிலீஸாவது தள்ளிப் போயுள்ளது.

 இந்த நிலையில் அனிருத் இன்று தனது 30வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதனை முன்னிட்டு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர். இந்நிலையில் அவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக மாஸ்டர் படக்குழு இன்று மாலை 6 மணிக்கு quit pannuda என்ற பாடலின் லிரிகல் வீடியோவை வெளியிட இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு அனிருத் மிக்க மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார். இந்த பாடல் வீடியோவுக்காக ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.


Advertisement