சினிமா

இளமையான தோற்றத்தில் நடிகர் விஜய்..! வைரலாகும் மாஸ்டர் பட பாடல் வீடியோ..!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார் விஜய். படம் அடுத்த மாதம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். குட்டி ஸ்டோரி, வாத்தி கம்மிங் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், படத்தின் இசை வெளியிட்டு விழா சமீபத்தில் நடந்துமுடிந்த நிலையில், மாஸ்டர் படத்தின் அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி வெற்றிபெற்றுவருகிறது.

இந்நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவன் வரிகளில், யுவன் ஷங்கர் ராஜா குரலில் வெளியாகியுள்ள "அந்த கண்ண பாத்தாக்கா" பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இப்பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

பாடலில் விஜய் மிகவும் அழகாக, ஸ்டையிலாக, இளமையான தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. தற்போது இந்த வீடியோ விஜய் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.


Advertisement