திருநங்கையால் விஷாலிற்கு வந்த பிரச்சனை.. மார்க் ஆண்டனி படம் தடையா.?
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அவர்களின் இயக்கத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 15 -ஆம் தேதி வெளியிடப்பட்டது 'மார்க் ஆண்டனி' திரைப்படம். இப்ப்படத்தில் நடிகர் விஷால், எஸ்.ஜே சூர்யா போன்ற பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். திரைப்படம் விஷாலுக்கு கம்பேக்காக இருக்கிறது என்று மக்களிடையே பேசப்பட்டு வருகிறது.
திரையரங்கில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் இத்திரைப்படத்தின் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி கோவையை சேர்ந்த திருநங்கை ஜாஸ்மின் அவர்கள் புகார் அளித்துள்ளார்.
திருநங்கை ஜாஸ்மின் அவர்கள் கூறியதாவது " இத்திரைப்படத்தில் திருநங்கைகள் மிகவும் இழிவாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளனர். இப்படம் டைம் ட்ராவல் திரைப்படம் என்பதால் நிகழ்வுகள் 10 ஆண்டுக்கு பின் நடப்பதாக எடுக்கப்பட்டுள்ளது எனவே திருநங்கைகள் பாலியல் தொழிலில் செய்பவரை போலவும், பல காட்சிகளில் கொலை செய்ய வருபவர் போல் எடுத்திருப்பது ஏற்ககூடியதல்ல என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இப்படிப்பட்ட காட்சிகள் திருநங்கைகளை அவமானப்படுத்தும் விதமாக இருப்பதாகவும், தற்போது சமுதாயத்தில் அங்கீகாரங்களை பெற்றுக் கொண்டிருக்கும் திருநங்கைகள் மறுபடியும் தங்கள் பழைய நிலைக்கு தள்ளப்படுவது போல் நிலைமை ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
நகைச்சுவை என்ற பெயரில் திருநங்கைகளை இழிவு படுத்துவதை எப்போதும் எங்களால் பொறுத்து கொள்ள முடியாது எனவும் கூறினார். Y.Gமகேந்திரன் திரைப்படத்தில் திருநங்கை போல நடித்துள்ளதாகவும் சில காட்சிகளில் தவறாக சித்தரிப்பதாகவும் கூறினார். மேலும் இப்படத்தை திரையிடப்படுவதை உடனே நிறுத்த வேண்டும் என திருநங்கை ஜாஸ்மின் புகாரளித்துள்ளார்.