சினிமா

எம்புட்டு அழகு..! வில்லன் நடிகர் மன்சூர் அலிகானின் மகளா இவர்..? வைரல் புகைப்படம்!

Summary:

பிரபல வில்லன் நடிகர் மன்சூர் அலிகானின் மகள் புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.

பிரபல வில்லன் நடிகர் மன்சூர் அலிகானின் மகள் புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமாக இருந்த வில்லன் நடிகர்களில் மன்சூர் அலிகானும் ஒருவர். விஜயகாந்த் நடிப்பில் வெளியான கேப்டன் பிரபாகரன் திரைப்படம் நடிகர் மன்சூர் அலிகானை புகழின் உச்சத்திற்கு அழைத்துச்சென்றது. கேப்டன் பிரபாகரன் படத்தை தொடர்ந்து பல்வேறு படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலும், குணசித்ர வேடத்திலும் நடித்து அசத்தியுள்ளார் மன்சூர் அலிகான்.

ஒருகாலத்தில் புகழின் உச்சத்தில் இருந்த இவர் புதுமுக நடிகர்களின் வரவு காரணமாக பட வாய்ப்புகள் இன்றி சினிமாவில் இருந்து ஒதுக்கப்பட்டார். பின்னர் அரசியல் பக்கம் கவனம் செலுத்த தொடங்கினார் மன்சூர் அலிகான்.

இந்நிலையில் மன்சூர் அலிகானின் குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது. மன்சூர் அலிகானுக்கு இரண்டு மகள்கள் மற்றும் 3 மகன்கள் உள்ளனர். இதில் இளைய மகள் பெயர் ஜுலைஹா. ஜுலைஹாவும் அவரது மூன்று சகோதர்களும் மன்சூர் அலிகான் தறித்த பூதாளம் என்ற படத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் மன்சூர் அலிகானின் மகள் ஜுலைஹாவின் அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. அவரது புகைப்படத்தை பார்க்கும் நெட்டிசன்கள், மன்சூர் அலிகானின் மகள் ஜுலைஹா பார்க்க மிகவும் அழகாக இருப்பதாக கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.


Advertisement