பிகில் படத்திற்காக பிரபல நடிகை செய்த காரியத்தை பார்த்தீர்களா!! வைரலாகும் புகைப்படத்தால் கெத்து காட்டும் தளபதி ரசிகர்கள்!!

பிகில் படத்திற்காக பிரபல நடிகை செய்த காரியத்தை பார்த்தீர்களா!! வைரலாகும் புகைப்படத்தால் கெத்து காட்டும் தளபதி ரசிகர்கள்!!



manju-variyar-released-pigil-ticket-in-kerala

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக கூட்டணியில் இணைத்து  பிகில் படத்தில் நடித்துள்ளார் தளபதி விஜய். இந்த படத்திற்கு  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.

கால் பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாகிவரும் பிகில் படத்தில் நயன்தாரா விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் விவேக், டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராப், கதிர், சவுந்தரராஜா, யோகி பாபு, இந்துஜா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

manju variyar 

இந்நிலையில்  பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை சாய்ராம் கல்லூரியில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து விஜய் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானது.மற்றும் இணையத்தையே கலக்கியது. மேலும் பட்டி தொட்டியெல்லாம் பிகில் பாடல் ஒலிக்க துவங்கியது.மேலும் அதனை தொடர்ந்து படம் ரிலீசாகும் நாளுக்காக ரசிகர்கள் பெருமளவில் காத்திருக்கின்றனர். 

நடிகர் விஜய்க்கு உலகமெங்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் கேரளாவில் இருக்கும் தளபதி ரசிகர்களுக்காக மற்றும் ஒரு ஷோ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனால் ரசிகர்கள் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்நிலையில் பிகில் ஸ்பெஷல் ஷோவின் டிக்கெட்டுக்களை ரசிகர்களுக்காக நடிகை மஞ்சு வாரியார் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

manju variyar