சினிமா

அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் கன்னியாஸ்திரிகள் போராட்டம்..!! பிரபல திரைப்பட நடிகை களம் இறங்கியுள்ளார்..!

Summary:

manju-on-protest-against-mother

கேரளாவில் ஸீரோ மலபார் சபையில் கீழ் பஞ்சாபி மாநிலம் ஜலந்தர் நகரில் ஒரு சபை செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. இந்த சபையில் பிஷபாக இருப்பவர் பிராங்கோ முல்லக்கல். இவர் மீது கோட்டையும் குருவிளங்காடு கன்னியாஸ்திரிகளில் ஒருவரான மடத்தை சேர்த்த கன்னியாஸ்திரி பாலியல் புகார் கூறி உள்ளார். கோட்டயத்திற்கு அந்த பக்கம் வந்த பொது தன்னை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர், போலீசிலும் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்...

கேரளா தனிப்படை போலீஸ் ஜலந்தர் சென்று பிஷப்பிடம் இந்த புகாரை பற்றி விசாரணை நடத்தினார்கள் என கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் கைது செய்யப்படலாம் என சூழ்நிலை உருவானது. ஆனால் இதுவரை பிராங்கோ முல்லக்கல் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தகவல் வெளிவந்த நிலையில் அது மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது... 

.இந்நிலையில் அவருக்கு எதிரியாக கன்னியாஸ்திரிகள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு பிரபல நடிகை மஞ்சு வாரியார் ஆதரவு தெரிவித்துள்ளார். நான் கன்னியாஸ்திரிகள் ஆதரவாக கலந்துகொள்கிறேன் என கூறியுள்ளார். பிராங்கோ முல்லக்கல் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் நிலை வந்தால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என்று கூறியுள்ளார். 
 


Advertisement