சினிமா

சிம்புவின் மாநாடு படம் கைவிடப்பட்டதா? தீயாய் பரவிய தகவல்! கடுப்பாகி செம பதிலடி கொடுத்த தயாரிப்பாளர்!

Summary:

Manaadu movie never dropped tweets by producer suresh kamachi

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாநாடு.  இப்படத்தை வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி என்பவர் தயாரித்து வருகிறார். மேலும் ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

மாநாடு திரைப்படத்திற்கு ஆரம்பத்திலிருந்தே ஏராளமான தடைகள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது நாடுமுழுவதும் அசுர வேகத்தில் பரவி வரும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில்,  மாநாடு படப்பிடிப்புகள் தடைபட்டுள்ளது.  இந்நிலையில் பிரபல ஆங்கில ஒன்றில் மாநாடு திரைப்படம் கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியானது. 

இதனை கண்டு கடுப்பான மாநாடு பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில், இதுபோன்ற செய்திகள் மீண்டும் வந்தால் நான் சம்பந்தப்பட்ட பத்திரிகை நிறுவனத்தை சும்மா விடமாட்டேன். நான் எப்பொழுதும் ஊடகத்துறையின் மீது மிகுந்த மரியாதை கொண்டு அவர்களுடன் நெருக்கமாக இருப்பேன். ஆனால் நான் மாநாடு படம் கைவிடப்பட்டதாக எந்த தகவலும்  வெளியிடவில்லை. மேலும்  தயாரிப்பாளர்களிடம் கேட்டு உறுதி செய்யாமல் எப்படி இது போன்ற செய்திகளை வெளியிடலாம் மாநாடு படம் ஒருபோதும் கைவிடப்பட மாட்டாது. இதுபோன்ற வேலையை கைவிடுங்கள் என கடுமையாக  விளாசியுள்ளார். 


Advertisement