ஒரு வேளை உணவுக்கு ரூ. 2.8 லட்சம் செலவு செய்த நபர்..! அவரை வலைவீசி தேடும் நெட்டிசன்கள்..!

ஒரு வேளை உணவுக்கு ரூ. 2.8 லட்சம் செலவு செய்த நபர்..! அவரை வலைவீசி தேடும் நெட்டிசன்கள்..!


Man spend 2 lakhs for one day dinner

ஒரு நேர சாப்பாட்டிற்காக நபர் ஒருவர் 2.8 லட்சம் செலவு செய்துள்ள சம்பவம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பெங்களூரில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் இரவு உணவுக்காக சென்ற அந்த நபர் ஒருவேளை உணவுக்காக ரூ. 2,76,988 செலவு செய்துள்ளார்.

அந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என எந்த தகவல்களும் வெளியாகவில்லை. ஆனால் அந்த நபர் சிறந்த உணவு மற்றும் மது வகைகளை விரும்புபவர் என தெரியவந்துள்ளது. மேலும், கடந்த ஆண்டில் உணவிற்காக செலவழிக்கப்பட்ட அதிக தொகை இதுவே எனவும் கூறப்படுகிறது.

Mystery

இந்த தகவல் அறிந்த நெட்டிசன்கள் அந்த நபரை கடுமையாக விமர்சித்துவருகின்றனர். இந்த பணத்தை வைத்து எவ்ளவோ நல்ல காரியங்கள் செய்திருக்கலாம், சுற்றுலா சென்றிருக்கலாம், கஷ்டப்படும் ஏழைகளுக்கு உதவி செய்திருக்கலாம். ஆனால், ஒருநேர சாப்பிட்டிற்காக இவ்வளவு பணம் செலவு செய்தது ரொம்பவே அதிகம் என கூறிவருகின்றனர்.