தல அஜித் ஸ்டைலில் பைக் ரேஸில் பைக் ஓட்டும் நடிகை மாளவிகா மோகனன்.! இனையத்தில் வைரலாகும் வீடியோ.!
Malavika mohanan riding bike video goes viral

தல அஜித் ஸ்டெய்லில் நடிகை மாளவிகா பைக் ஓட்டும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வரைலகிவருகிறது.
கடந்த வருடம் சூப்பர் ஸ்டார் நடித்த பேட்ட திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன். பேட்ட படத்தில் சிறுகாதாபாத்திரம் என்றாலும் தற்போது தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார் மாளவிகா.
இந்நிலையில், பைக் ரைடிங் என்பது தனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று என்றும், கடந்த வருடம் ஜூன் மாதம் நொய்டாவில் உள்ள பைக் ஓட்டும் மைதானத்தில், இந்தியாவின் முதல் பார்முலா ஒன் பந்தயத்தில் மிகச்சிறந்த பைக் ரைடர்கள் சிலருடன் பைக் ஓட்டியதாக கூறியுள்ளார் மாளவிகா.
அவர்கள் அளவிற்கு என்னால் பைக் ஓட்டமுடியவில்லை என்றாலும், என் வாழ்நாள் முழுவதும் பைக் ரெகுலராக பைக் ஓட்டுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்றும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.