சினிமா

அழகு தேவதைபோல் மரத்தடியில் மாஸ்டர் நாயகி.. கவிதைகளால் வர்ணிக்கும் ரசிகர்கள்.. வைரலாகும் புகைப்படம்..

Summary:

மாஸ்டர் பட நாயகி மாளவிகா மோகனன் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருகிறது.

மாஸ்டர் பட நாயகி மாளவிகா மோகனன் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் மாளவிகா மோகனன். பேட்ட படத்தில் அவர் கதா நாயகி இல்லை என்றாலும், அடுத்த படமே தளபதி விஜய்க்கு ஜோடியாகும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

தற்போது மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ள அவர் படம் வெளிவருவதற்காக காத்து இருக்கிறார். மாஸ்டர் படம் வெளியான பிறகு இவரது மார்க்கெட் மேலும் எகிறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஒருசில படங்களில் பிசியாக இருக்கும் அம்மணி எப்போதும் சமூக வலைத்தளங்களில் பயங்கர பிசியாக உள்ளார்.

அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் இவர், தற்போது மிகவும் ஹோம்லியான லுக்கில், மரத்தடியில் அமர்ந்தவாறு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.


Advertisement