அந்த விஷயத்திற்காக ஐந்து மணி நேரம் ஒரே ரூமில் இருந்து கஷ்டப்பட்ட நடிகை மாளவிகா மோகனன்..



malavika-mohanan-makeup-video

தமிழ் சினிமாவில் அறியப்படும் நடிகையாக இருப்பவர் மாளவிகா மோகனன். இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

malavika

தமிழ் சினிமாவில் முதலில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'பேட்ட' மற்றும் விஜய் நடிப்பில் வெளியான 'மாஸ்டர்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்பதால் இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் குறைந்தன.

இந்நிலையில் தற்போது விக்ரம் நடிப்பில் 'தங்கலான்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மாளவிகா மோகனனின் கதாபாத்திரத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகி வருகிறது.

malavika

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பிற்காக மேக்கப் போடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் 5 மணி நேரமாக ஒரே ரூமில் மாளவிகா மோகன் மேக்கப் போட்டுக் கொள்வது போன்ற காட்சி உள்ளது. இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.