90ஸ் நடிகைகளின் திடிர் ரீ யூனியன்.?வைரலாகும் புகைப்படத்தால் ரசிகர்கள் ஆச்சரியம்.!



Malavika and reemasen viral photos

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் மாளவிகா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக 90 படங்களில் வலம் வந்தார்.

malavika

1999 ஆம் வருடம் அஜித் நடிப்பில் வெளியான 'உன்னை தேடி' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் காலடியெடுத்து வைத்தார். இப்படத்திற்கு பின்பு பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வந்தார் மாளவிகா.

சினிமாவில் பிஸியாக இருக்கும்போதே திடீரென்று தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பு நடிப்பிலிருந்து விலகிவிட்டார் மாளவிகா. மேலும் சமூக வலைத்தளங்களில் பிசியாக இருந்து வருகிறார்.

malavika

இது போன்ற நிலையில், மாளவிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 90ஸ் ஹிட்ஸ் படத்தின் மற்றொரு கனவு கன்னியான ரீமா சென்னுடன் இணைந்து புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இப்புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் "90ஸ் கிட்ஸ் கனவு கன்னிகளின் ரீ யூனியானா" என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.