சினிமா

ஆமா உண்மைதான்! லாக்டவுனில் மகிழ்ச்சியான செய்தியை கூறிய மைனா நந்தினி! குவியும் வாழ்த்துக்கள்!

Summary:

maina nandhini became mother

தமிழ் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி என்ற தொடரில் குடும்ப பாங்கான கிராமத்து பெண்ணாக, மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நந்தினி. இவர் வம்சம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து பல தொடர்களில் மிகவும் சிறப்பாக நடித்திருந்தார். அவருக்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 

அதனைத் தொடர்ந்து சீரியல், டான்ஸ் ஷோ என பிஸியாக இருந்த மைனாநந்தினி, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாயகி  தொடரில் நடித்து வரும் நடிகர் யோகேஷை காதலித்து வருவதாக செய்திகள் பரவி வந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் இருவரும் திருமணம் செய்துகொண்டனர் . 

இந்நிலையில் மைனா நந்தினி, தற்போது கர்ப்பமாக உள்ளார். நேற்று மைனா நந்தினி தனது பிறந்தநாளை கணவர் மற்றும் குடும்பத்துடன் மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடினார். அந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதனை கண்ட ரசிகர்கள் நந்தினி சற்று உடல் எடை கூடி இருந்த நிலையில் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா என கேள்வி எழுப்பினர். இதனை தொடர்ந்து பேட்டி ஒன்றில்  மைனா நந்தினி தான் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளார். இந்நிலையில் யோகேஸ் மற்றும் மைனா நந்தினி ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது


Advertisement