திரில்லாக இணையும் பிக்பாஸ் புகழ் மகத் மற்றும் யாசிகா! முடிந்தது பூஜை
பிரபல தனியார் தொலைக்காட்சில் ஒளிபரப்பான நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 2. இதில் போட்டியாளராக பங்கேற்றவர்கள் யாஷிகா ஆனந்த் மற்றும் நடிகர் மகத். யாசிகா இருட்டு அறையில் முரட்டு குத்து, நோட்டா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இவர்கள் இருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்தபோது மிகவும் நெருக்கமாகினர். மேலும் மகத் யாஷிகாவை காதலிப்பதாக வதந்திகளும் பரவ தொடங்கின. இந்நிலையில் காதல் வதந்திகள் அந்த நிகழ்ச்சியோடு முடிவுக்கு வந்தது.

ஏனெனில் மகத் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே பிராச்சி என்ற பெண்ணை காதலித்து வந்தார். நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்ததும் காதலியுடன் மீண்டும் இணைந்தார் மகத். இருப்பினும் யாசிகா மற்றும் மகத் இருவரும் இன்னும் அதே தொலைக்காடசியில் ஒரு நிகழ்ச்சிக்கு நடுவர்களாக இருந்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து இருவரும் இணைந்து ஒரு திரில்லர் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். பரதன் பிக்சர்ஸ் சார்பில் உருவாகும் இந்த படத்தினை அறிமுக இயக்குனர்கள் மகேஷ் மற்றும் வெங்கடேஷ் இயக்குகின்றனர். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.