சினிமா

அட.. இதுவுமா! விக்ரமின் மகான் குறித்து வெளிவந்த முக்கிய தகவல்! செம எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

Summary:

அட.. இதுவுமா! விக்ரமின் மகான் குறித்து வெளிவந்த முக்கிய தகவல்! செம எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இருவரும் இணைந்து நடித்துள்ள மகான் திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழில் ஏராளமான மாஸ் மற்றும் சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். எத்தகைய கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்கேற்றவாறு தனது உடலமைப்பை மாற்றி கடினமாக உழைக்கக்கூடிய விக்ரம் அடுத்ததாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் மகான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் அவரது மகன் துருவ் விக்ரமும் இணைந்து நடித்துள்ளார். இப்படம் கேங்ஸ்டர் கதையம்சத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மகான் திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்புகள் முடிந்து படம் வெளியிடுவதற்கான பின்னணி வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மகான் படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது படம் வரும் நவம்பர் மாதம் தீபாவளியை முன்னிட்டு ரிலீசாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement