அடேங்கப்பா, என்ன ஒரு தைரியம் இந்த பொண்ணுக்கு.. வீடியோ பாருங்க உங்களுக்கே புரியும்!!

magima post asuraguru practise video


magima post asuraguru practise video

தமிழ் சினிமாவில் பிரபு சாலமன் இயக்கத்தில், சமுத்திரக்கனி நடிப்பில் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பபை பெற்ற மாபெரும் வெற்றி திரைப்படம் சாட்டை. இப்படத்தில் அறிவழகியாக  நடித்து தமிழ் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர் மகிமா நம்பியார்.

அதனைத் தொடர்ந்து அவர் அருண் விஜய் நடிப்பில் வெளியான குற்றம்23 படத்தில் கதாநாயகியாக நடித்தார்.இந்நிலையில் தற்போது மகிமா, விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகி வரும் அசுர குரு என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ராஜ்தீப் சிங் இயக்கியுள்ளார்.

mahima nampiar

 இந்த படத்தில் மஹிமா நம்பியார் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் அதில் அசுர குரு படத்தில் எனது கதாப்பாத்திரத்தை குறித்து கேட்டதும் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை ஒரு ஒரு பெண்ணாக இருந்து கொண்டு இந்த கதாபாத்திரத்திற்கு மாறுவது அவ்வளவு எளிதல்ல என தான் பயிற்சி பெற்ற வீடியோவை வெளியிட்டுள்ளார். 

மேலும் அந்த வீடியோவில் மகிமா தைரியமாக புகைப்பிடிக்கும் காட்சியில் நடித்ததற்கு நெட்டிசன்கள் சிலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.