சினிமா

என்னது..மகேஷ்பாபுவுடன், கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படத்தின் கதை இதுதானா? அதுல அவரோட கேரக்டர் என்னனு பாத்தீங்களா!!

Summary:

தமிழ் சினிமாவில் பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம்

தமிழ் சினிமாவில் பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். பெரும் ரசிகர்கள் பட்டாளத்தையே கொண்டிருக்கும் இவர் தெலுங்கிலும் எக்கச்சக்க திரைப்படங்களில் நடித்து வருகிறார். கீர்த்தி சுரேஷ் கைவசம் தற்போது தமிழில் செல்வராகவனுடன் சாணிக் காயிதம், ரஜினி நடிப்பில் உருவாகும் அண்ணாத்த போன்ற படங்கள் உள்ளன.

மேலும் இதற்கிடையில் கீர்த்தி சுரேஷ் தெலுங்கில் மெகா ஸ்டாரான மகேஷ்பாபுக்கு ஜோடியாக சர்காரு வாரி பாட்டா என்ற படத்தில் நடித்து வருகிறாராம். மைதிரி மூவி மேக்கர்ஸ், 14 ரீல்ஸ் பிளஸ் மற்றும் மகேஷ்பாபு என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை த்ரிவிக்ரம் இயக்குகிறார். தமிழில் எவ்வாறு தல-தளபதி படங்களுக்கு வரவேற்பு இருக்குமோ அதனை போலவே தெலுங்கிலும் மகேஷ்பாபு படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். 

Keerthy Suresh To Star With Mahesh Babu? - Desimartini

இந்த நிலையில் இப்படத்தின் கதை குறித்த தகவல்கள் கசிந்துள்ளது. அதாவது சர்காரு வாரி பாட்டா திரைப்படம் வங்கி மோசடியை மையப்படுத்தி உருவாகுவதாகும், அதில் மகேஷ்பாபு வங்கி மேலாளராகவும், கீர்த்தி சுரேஷ் அவரது உதவியாளராகவும் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.


Advertisement