உயிரும் உனக்கு நகம் போல! தல அஜித் குறித்து மிக உருக்கமாக முக்கிய பிரபலம் வெளியிட்ட பதிவு!

lyrist arun bharathi tweet about thala ajith


lyrist arun bharathi tweet about thala ajith

நடிகர் அஜித் தற்பொழுது நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் உருவாகிவரும் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார், மேலும் அந்த படத்தில் ஏராளமான பைக் ஸ்டண்ட் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தின் இறுதிக்காட்சி தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. அப்பொழுது பைக் ஸ்டன்ட் காட்சி ஒன்றில் நடித்துக் கொண்டிருந்தபோது அஜித் கீழே விழுந்து விட்டதாகவும் அதனால் அவர் கை மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது. மேலும் அதனையும் பொருட்படுத்தாமல் அஜித் கொண்டு தொடர்ந்து படப்பிடிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

Ajith

இந்நிலையில் அஜித்துக்கு காயம் ஏற்பட்டுள்ள செய்தி பரவிய நிலையில் அது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் ரசிகர்கள்  #GetwellsoonThala என ட்விட்டரில் ட்ரென்ட் செய்தும்  வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல பாடலாசிரியர் அருண் பாரதி அஜித் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் மிக உருக்கமாக "உயிரும் உனக்கு நகம்போல, வெட்ட வெட்ட முளைத்திடுவாய்
காயம் எத்தனை வந்தாலும், ரசிகனுக்காக பிறப்பெடுப்பாய்! " என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.