தமிழகம் Covid-19

பட்டப்பகலில், உச்சி வெய்யிலில் மடியில் படுத்து கொஞ்சிய காதல் ஜோடி..! ஊரடங்கை மீறிய காதல்.! ட்ரோன் கேமிரா மூலம் பிடித்த போலீசார்.!

Summary:

Lovers caught in police drone camera video goes viral

கொரோனா தொற்றினால் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும் பலர் அதை மீறி வருகின்றனர். இந்நிலையில் ட்ரோன் கேமிராக்களை பயன்படுத்தி வெளியே சுற்றுபவர்களை போலீசார் கையும் களவுக்கமாக பிடித்துவருகின்றனர்.

சமீபத்தில் திருப்பூரில் கேரம் போர்ட் விளையாடிய இளைஞர்கள், சேலத்தில் கிரிக்கெட் விளையாடிய இளைஞர்கள் இப்படி பலரும் போலீசாரின் ட்ரோன் கேமிராவில் சிக்காமல் இருக்க, கைலியை அவிழ்த்து முகத்தில் மூடிக்கொண்டு ஓடிய சம்பவம் வீடியோவாக வெளியாகி வைரலானது.

தற்போது காதல் ஜோடி ஒன்று நடு காட்டில் இருக்கும் புதருக்குள் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர். அதில், காதலி காதலனின் மடியில் படுத்துக்கொண்டு ஜாலியாக பேசிக்கொண்டிருக்க, அவர்களுக்கு தெரியாமல் அங்கே வந்த ட்ரோன் கேமிரா அவர்களை படம்பிடித்துள்ளது. தெப்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.


Advertisement