கவர்ச்சி, கொடுமை என அடல்ட் காட்சிகளால் கவனத்தை பெரும் எல்எஸ்ஏடி 2 திரைப்படத்தின் முன்னோட்ட காட்சிகள்.. வீடியோ உள்ளே.!Love Sex Aur Dhokha 2 Teaser 


தீபகர் பேனர்ஜீ இயக்கத்தில், ஷோபா கபூர் தயாரிப்பில், நிம்ரித் கவுர் அலுவாலியா, நிம்ரித் கவுர் உட்பட பலரின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லவ் செக்ஸ் அவுர் தோகா 2 (Love Sex Aur Dhokha 2).

டிஜிட்டல் யுகத்தில் பெண்கள் சந்திக்கும் பிரச்சனை மற்றும் அவர்களை அறியாமல் நடக்கும் விஷயங்கள், காதல் மற்றும் அதனை கடந்த காமம் என படத்தின் காட்சிகள் செதுக்கப்பட்டு இருக்கின்றன.

மாற்றுப்பாதையில் சென்றுகொண்டு இருக்கும் சமூகத்தின் அவல நிலையை அம்பலப்படுத்த எடுக்கப்பட்டுள்ள திரைப்படத்தின் முன்னோட்ட காட்சிகளில் அடல்ட் காணொளி நிறைந்து காணப்படுகின்றன. 

இதனால் படத்தை குடும்பத்துடன் அல்லது குழந்தைகளுடன் அமர்ந்து பார்க்க இயலாது எனினும், அதன் விழிப்புணர்வை கொண்டு சேர்ப்பது ஒவ்வொருவரின் கடமையாக மாறி இருக்கிறது. நவீன யுகத்தில் பெண்களை மையமாக வைத்து நடக்கும் குற்றங்களில் பெண்களின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியை சந்திக்கிறது. அதற்கு விடையளிக்கும் வகையில் படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.