
losliyaa over makeup photo viral
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களுள் ஒருவராக கலந்துகொண்டவர் லாஸ்லியா. இலங்கையை சேர்ந்த இவர் செய்திவாசிப்பாளராக இருந்தார். மேலும் லாஸ்லியா பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தது முதல் ரசிகர்களால் பெருமளவில் கவரப்பட்டார்.
இவருக்கென ஏகப்பட்ட ரசிகர்பட்டாளமும், ஆர்மியும் உருவானது. மேலும் இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் எப்பொழுதும் கலகலப்பாகவும், பட்டாம்பூச்சி போல சுற்றிக்கொண்டும் இருந்தார். அதனைத் தொடர்ந்து அவருக்கு கவின் மீது காதல் ஏற்பட்டு சிறு சலசலப்பும், சர்ச்சையும் கிளம்பியது. அதன் பின்னரே அவர் மீது ரசிகர்களுக்கு சிறுஅதிருப்தி ஏற்பட்டது.
இருப்பினும் போட்டியில் தனது கவனத்தை செலுத்தி வந்த அவர் 105 நாட்கள் கடந்து இறுதிவரை சென்று மூன்றாம் இடத்தை பிடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்து மிகவும் பிசியாக இருந்த லாஸ்லியா சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் புகைபடம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதனை கண்ட ரசிகர்கள் லாஸ்லியாவின் மேக்கப் மற்றும் முகபாவனையை கிண்டல் செய்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
— Losliya Mariyanesan Fan💙 (@Losliyamaria96) November 7, 2019
Advertisement
Advertisement