சினிமா

பிறந்தநாள் கொண்டாடிய லாஸ்லியாவின் அம்மா! வாவ்.. மாடர்ன் உடையில் எப்படியிருக்காங்க பார்த்தீங்களா!

Summary:

விஜய் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழ் ரசி

விஜய் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்து பெருமளவில் பிரபலமானவர் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா.பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்த ஒரு சில நாட்களிலேயே பட்டாம்பூச்சி போல சுற்றி திரிந்த அவருக்கென பெரும் ஆர்மி உருவானது. 

இவ்வாறு இளைஞர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வந்த அவர் சக போட்டியாளரான கவினுடன் காதல் சர்ச்சையில் சிக்கி அவர் ரசிகர்களின் விமர்சனத்திற்கும் உள்ளானார். ஆனாலும் அவர் சிறப்பாக விளையாடி நிகழ்ச்சியின் இறுதிவரை சென்றார். அதனை தொடர்ந்து லாஸ்லியாவிற்கு ஏராளமான படவாய்ப்புகள் வர துவங்கியது. அவர் ஹர்பஜன் சிங்குடன் பிரெண்ட்ஷிப் மற்றும்  தர்ஷனுடன் கூகுள் குட்டப்பன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது லாஸ்லியாவின் அம்மா பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர். அதனை தொடர்ந்து லாஸ்லியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தன்னுடைய அம்மா மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு, அப்பாவுக்கு பிறகு என்னிடம் எதையும் எதிர்பார்க்காம அன்பு செலுத்தும் ஒரே ஆள் நீங்கதான் என உருக்கமாக பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். 


Advertisement