சினிமா

இப்படி காதலிப்பவர்தான் தேவை! புடவையில் கொள்ளை அழகில் இருக்கும் வீடியோவை வெளியிட்ட லாஸ்லியா!!

Summary:

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களால் மத்தியில் பிரபலமானவர்

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா. இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த சில நாட்களிலேயே பெரும் ரசிகர்கள் பட்டாளத்தையே பெற்றார். அதனைத் தொடர்ந்து அவர் சக போட்டியாளரான கவினுடன் காதல் சர்ச்சையில் சிக்கி விமர்சனங்களை சந்தித்தார்.

பின்னர் FREEZE டாஸ்கில் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த லாஸ்லியாவின் அப்பா அவரை கண்டித்ததை தொடர்ந்து அவர் போட்டியில் கவனம் செலுத்தி நிகழ்ச்சியின் இறுதிவரை சென்றார். அதனை தொடர்ந்து அவருக்கு படவாய்ப்புகள் கிடைத்துள்ளது. அவர் ஹர்பஜன் சிங்குடன் பிரெண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளராக இருந்த தர்ஷனுடன் இணைந்து கூகுள் குட்டப்பன் என்ற படத்தில் நடிக்கிறார்.

இதற்கிடையில் சமூகவலைதளங்களில் பிஸியாக இருக்கும் லாஸ்லியா அவ்வப்போது தனது போட்டோசூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். இந்த நிலையில் சில காலங்களுக்கு முன் அவர் சேலையில் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு மிக கடினமாக சூழலில் கூட என் மீது அன்பு செலுத்தும், காதலிக்கும் ஒருவர் தேவை என பதிவிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.


Advertisement