லாஸ்லியா பள்ளிப் பருவத்திலேயே இப்படிதானா?ஆசிரியருடன் செய்த காரியத்தை பார்த்தீர்களா.! வைரலாகும் வீடியோ!!



losliya-school-age-video-viral

பிக்பாஸ் சீசன்மூன்று கமல்ஹாசன் தொகுத்து வழங்க மிகவும் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. மொத்தம் 16 பிரபலங்கள் போட்டியாளராக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா, ரேஷ்மா, சரவணன்,சாக்‌ஷி ஆகியோர் கடந்த நாட்களில் வெளியானர். அதனை தொடர்ந்து வைல்டுக்கு கார்டு எண்ட்ரியாக நடிகை கஸ்தூரி பிக்பாஸ் வீட்டிற்கு வந்தார்.

பின்னர் விருந்தினராக வனிதா மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். அவர் வந்ததுமே  பல பிரச்சினைகள் வெடித்து வீடே இரண்டானது. இந்நிலையில் கடந்த வாரம் அபிராமி குறைந்த ஓட்டுக்களை பெற்று வெளியேறியநிலையில், தற்கொலை முயற்சி மேற்கொண்டதற்காக நடிகை மதுமிதா வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். அதனால் பெரும் பரபரப்பு நிலவியது.

losliya

இந்நிலையில் பிக்பாஸ் தொடங்கிய இரண்டாவது நாளே ரசிகர்களால் பெருமளவில் கவரப்பட்டவர் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா. ஏராளமான ரசிகர்களை பெற்ற அவருக்கு ஆர்மியும் உருவானது. இந்நிலையில் அனைத்திலும் சரியாக நடந்துகொண்ட லாஸ்லியா கவின் விஷயத்தில் மட்டும் கொஞ்சம் வித்தியாசமாக நடந்து கொண்டார். மேலும் இதனாலேயே ரசிகர்களிடம் தற்பொழுது சிறிதளவு வெறுப்பையும் சம்பாதித்துள்ளார்.

 எப்பொழுதும் பிக்பாஸ் வீட்டிற்குள் துருதுருவென இருக்கும் லாஸ்லியாவின்  பள்ளிப்பருவ வீடியோ ஒன்று தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இப்பொழுது போலவே அதிலும் லாஸ்லியா துருதுருவென ஆடிக்கொண்டே உள்ளார். இந்த புகைப்படத்தை லாஸ்லியா ஆர்மியினர் வைரலாக்கி வருகின்றன.