சினிமா

பிக்பாஸ் லாஸ்லியாவிற்கு அடுத்த வருஷம் திருமணமா? மாப்பிள்ளை இவரா? தீயாய் பரவிவரும் தகவல்!

Summary:

பிக்பாஸ் லாஸ்லியாவுக்கு அவரது பெற்றோர்கள் திருமண ஏற்பாடு செய்வதாகவும், அடுத்த வருடம் திருமணம் எனவும் தகவல் தீயாய் பரவி வருகிறது.

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் லாஸ்லியா. இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான இவருக்கென பெரும் ஆர்மி உருவானது.  மேலும் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மற்றொரு போட்டியாளரும், நடிகருமான கவினுடன், காதல் வசப்பட்டு சர்ச்சையில் சிக்கினார்.

ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய அவர், அதனைத் தொடர்ந்து கவினை கண்டுகொள்ளவில்லை. அதுமட்டுமின்றி கவினை குறித்த கேள்விகளுக்கும் சரியாக பதிலளிக்கவில்லை. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிவரை சென்ற அவருக்கு அதனை தொடர்ந்து ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்தது. 

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் லாஸ்லியா அவ்வப்போது வித்தியாசமான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதற்கிடையில் லாஸ்லியாவிற்கு, அவரது பெற்றோர்கள் கனடாவை சேர்ந்த தங்களது நண்பனின் மகனுக்கு திருமணம் செய்துவைக்க ஏற்பாடுகள் செய்து வருவதாகவும், கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கால் 2021 ஆம் ஆண்டு திருமணம் நடைபெறவுள்ளது எனவும் தற்போது தீயாய் தகவல்கள் பரவி வருகிறது. ஆனால் இதுகுறித்து லாஸ்லியா தரப்பிலிருந்து எதுவும் கூறப்படவில்லை. 


Advertisement