அட.. என்னம்மா இது புது ஸ்டைலா! பிக்பாஸ் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்தீர்களா!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமாகி இளைஞர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் லாஸ்லியா. இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான இவருக்கு பிக்பாஸ் வீட்டில் நுழைந்த சில நாட்களிலேயே ஆர்மி உருவானது. ஆனால் நாளடைவில் அவர் தனது சக போட்டியாளரான கவினுடன் காதல் சர்ச்சையில் சிக்கி விமர்சனங்களுக்கு உள்ளானார்.
ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பிறகு அவர்கள் இருவருமே அவரவர் வேலையை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் அண்மையில் லாஸ்லியாவின் தந்தை திடீரென மாரடைப்பு காரணமாக இறந்துள்ளார். மேலும் லாஸ்லியாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்த நிலையில் அவர் பிரண்ட்ஷிப், கூகுள் குட்டப்பன் என தொடர்ந்து சில படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
. #Losliya pic.twitter.com/G27JtHV94a
— Losliya Mariyanesan ▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️ᴾᵃʳᵒᵈʸ (@Losliyamaria96) March 4, 2021
இந்நிலையில் எப்பொழுதும் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் லாஸ்லியா அவ்வப்போது தனது புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் அவர் தற்போது மாடர்ன் உடையில் இரட்டை ஜடை போட்டுக்கொண்டு அசத்தலான புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.