சினிமா

மஞ்சக்காட்டு மைனா! உடல் எடை குறைந்து சும்மா சிக்கென மாறிய லாஸ்லியா! எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா!

Summary:

losliya latest photo viral

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களுள் ஒருவராக கலந்துகொண்டவர் லாஸ்லியா. இவர் இலங்கையை சேர்ந்த செய்திவாசிப்பாளர் ஆவார். இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தது முதல் ரசிகர்களால் பெருமளவில் கவரப்பட்டார். பிக்பாஸ் வீட்டில் பட்டாம்பூச்சி போல சுற்றி திரியும் இவருக்கென ஏகப்பட்ட ரசிகர்பட்டாளமும்,  ஆர்மியும் உருவானது. 

அதனைத் தொடர்ந்து அவருக்கு கவின் மீது காதல் ஏற்பட்டு சிறு சலசலப்பும், சர்ச்சையும் கிளம்பியது. இருப்பினும் போட்டியில் தனது கவனத்தை செலுத்தி வந்த அவர் 105 நாட்கள் கடந்து இறுதிவரை சென்று மூன்றாம் இடத்தை பிடித்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்து மிகவும் பிசியாக இருக்கும் லாஸ்லியா தனது சமூகவலைத்தள பக்கத்தில் அவ்வப்போது தனது புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் வரும்பொழுது சிக்கென இருந்து பின்னர் உடல் எடை அதிகரித்த அவர் தற்போது ஜிம்மிற்கு சென்று உடல் எடையை குறைத்துள்ளார். 

 இந்நிலையில் அவர் மஞ்சள் நிற உடையில் புதிய போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை கண்ட ரசிகர்கள் அவரை வர்ணித்து வருகின்றனர். 


Advertisement