வாவ்! பிக்பாஸ் லாஸ்லியாவா இது! திடீரென இப்படி மாறிட்டாரே!! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்!!

losliya latest photo viral


losliya latest photo viral

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் லாஸ்லியா. இலங்கையை சேர்ந்த அவர் செய்தி வாசிப்பாளராக இருந்துள்ளார். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் நுழைந்த சில நாட்களிலேயே இவரது அழகிற்கும் இவர் பேசும் தோரணைக்கும் ஏராளமான ரசிகர் பட்டாளம் உருவானர். மேலும் பட்டாம்பூச்சி போல சுற்றித்திரிந்த இவருக்கு ஆர்மியும்  உருவானது. 

இவ்வாறு ரசிகர்களிடையே பிரபலமான இவர் மற்றொரு போட்டியாளரான கவினுடன் ஏற்பட்ட காதல் விவகாரத்தின் மூலம் சற்று மோசமான விமர்சனங்களை பெற துவங்கினார். அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் வீட்டிற்குள் விருந்தினராக வந்த அவரது தந்தையும் லாஸ்லியாவை கண்டித்து அவரிடம் மிகவும் கண்டிப்புடன்  நடந்து கொண்டார். 

losliya

அதனை தொடர்ந்து போட்டியில் தனது முழு ஆர்வத்தையும் காட்டிவந்த லாஸ்லியா 105 நாட்களை கடந்து இறுதி வரை சென்று மூன்றாம் இடத்தை வென்றார். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்த போது சற்று உடல் எடை அதிகரித்து காணப்பட்ட லாஸ்லியா  தற்போது மீண்டும் எடை குறைந்து காணப்படுகிறார். மேலும் அத்தகைய புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட நிலையில் அது வைரலாகி வருகிறது.
losliyalosliya