இலங்கை திரும்பிய லாஸ்லியாவிற்கு இப்படியொரு நிலைமையா? தீயாய் பரவும் வீடியோ!!
இலங்கை திரும்பிய லாஸ்லியாவிற்கு இப்படியொரு நிலைமையா? தீயாய் பரவும் வீடியோ!!

பிக்பாஸ் சீசன் மூன்று கடந்த 105 நாட்களாக மிகவும் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு முடிவுக்கு வந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களுள் ஒருவராக கலந்து கொண்டவர் இலங்கையைச் சேர்ந்த செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா.
இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த மறுநாளே இவருக்கென ஏகப்பட்ட ரசிகர்பட்டாளமும், ஆர்மியும் உருவானது. மேலும் இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் எப்பொழுதும் கலகலப்பாகவும், பட்டாம்பூச்சி போல சுற்றிக்கொண்டும் இருந்தார். அதனைத் தொடர்ந்து அவருக்கு கவின் மீது காதல் ஏற்பட்டு சிறு சலசலப்பும், சர்ச்சையும் கிளம்பியது.
இருப்பினும் இறுதி கட்டம் வரை சென்ற அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது இடத்தைப் பெற்று வென்றார்இருப்பினும் இறுதி கட்டம் வரை சென்ற அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது இடத்தைப் பெற்று வென்றார்.
அதனை தொடர்ந்து பிக்பாஸ் கொண்டாட்டத்தில் பிஸியாக இருந்த அவர் தற்பொழுது தனது தாய்நாடான இலங்கைக்கு திரும்பியுள்ளார். அங்கு அவரைக் கண்ட ரசிகர்கள் அவரை கோலாகலமாக கொண்டாடி வரவேற்றுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.