பாவடை தாவணியில் இடுப்பை வலைத்து நெளித்து ஆடிய லாஸ்லியா.. வைரல் வீடியோ..

இடுப்பை வளைத்து நெளித்து ஆட்டம் போட்ட லாஷ்லியாவின் வீடியோ வைரலாகிவருகிறது


losliya-cute-dance-video

நடிகை லாஸ்லியாவின் குயூட் நடன வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்டவர்களுள் ஒருவர் லாஸ்லியா. இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா மரியநேசன் அவரது பேச்சாலும், கொள்ளை அடிக்கும் அழகாலும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த சில நாட்களிலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி ஏராளமான ரசிகர்களை பெற்றார்.  ஆனால் நாளடைவில் அவர் மற்றொரு போட்டியாளரான கவினுடன் காதல் சர்ச்சையில் சிக்கி ரசிகர்களிடயே மேலும் புகழை பெற்றார்.

losliya

இதை தொடர்ந்து, முழு நடிகையாக உருவெடுக்க பிக்பாஸ் நிகழ்ச்சி அவருக்கு பல வாய்ப்புகளைப் பெற்று தந்தது. ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இருவரும்  எழுதி இயக்கும் திரைப்படம் ஃப்ரண்ட்ஷிப். இந்நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பிரண்ட்ஷிப் படத்தின் ஷூட்டிங் கொரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் தொடங்கப்பட்டு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாகவும்,லாஸ்லியா ஹீரோணியாவும் நடிக்கிறார்.

இந்தநிலையில் படத்தின் ஷூட்டிங் போது லாஸ்லியா அழகான பாவடை தாவணியில் இடுப்பை  வலைத்தபடி அழகான நடனம் ஒன்றை ஆடி ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.