கோலாகலமாக நடந்த லாஸ்லியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்! அட.. இந்த பிக்பாஸ் பிரபலமும் இருக்காரா?? வைரலாகும் வீடியோ!!

கோலாகலமாக நடந்த லாஸ்லியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்! அட.. இந்த பிக்பாஸ் பிரபலமும் இருக்காரா?? வைரலாகும் வீடியோ!!


Losliya birthday celebration video viral

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு அனைவரையும் கவர்ந்து பிரபலமானவர் லாஸ்லியா. இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான இவர் தனது குழந்தைதனமான பேச்சால், அழகான சிரிப்பால் பலரது மனதையும் கொள்ளை கொண்டார். இவருக்கென பெரும் ஆர்மியும் உருவானது.

மேலும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த நிலையில் அவர் சினிமாவில் பிஸியாகிவிட்டார். அவர் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து நடித்த பிரண்ட்ஷிப் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து அவர் தற்போது பிக்பாஸ் தர்ஷனுடன் இணைந்து கூகுள் குட்டப்பன் படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் லாஸ்லியா தற்போது தனது பிறந்தநாளை மிகவும் கோலாகலமாக நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ளார். அந்தப் புகைப்படங்கள் அடங்கிய வீடியோவை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பிக்பாஸ் தர்ஷனும் உள்ளார். அந்த வீடியோ வைரலான நிலையில் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.