திருப்பதிக்கு திடீர் பாதயாத்திரை சென்ற இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.! என்ன காரணம்.?
2017ம் ஆண்டு "மாநகரம்" திரைப்படத்தை இயக்கியதின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். தொடர்ந்து இவர் கைதி, விக்ரம், மாஸ்டர் ஆகிய ப்ளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.
மீண்டும் இவர் விஜயை வைத்து இயக்கியுள்ள "லியோ" திரைப்படம் வரும் 19ம் தேதி வெளியாகவுள்ளது. எனவே படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் இயக்கும் படங்களின் ரிலீசுக்கு முன்னர் கோவிலுக்கு செல்வார்.
அந்த வகையில், கைதி பட ரிலீசுக்கு முன்னர் லோகியும், இயக்குனர் ரத்னகுமாரும் சேர்ந்து ராமேஸ்வரம் சென்றனர். தொடர்ந்து மாஸ்டர் பட ரிலீசுக்கு முன்னும் லோகி, இசையமைப்பாளர் அனிருத் மற்றும் படக்குழுவினருடன் திருவண்ணாமலை சென்று தரிசனம் செய்து வந்தார்.
அந்த வகையில் தற்போதும் தனது சென்டிமெண்ட் படி, லியோ படக்குழுவுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர்கள் திருப்பதி மலையேறும்பொது எடுத்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.