விரைவில் வெளியாகபோகும் லியோவின் மாஸ் அப்டேட் .. லோகேஷ் கனகராஜினி வைரல் பதிவு.!



Lokesh kagaraj post about Leo movie update

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடித்துள்ள திரைப்படம் "லியோ".செவன் ஸ்க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வரும் அக்டோபர் 19ம் தேதி வெளியாகவுள்ளது. மேலும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 30ம் தேதி நடைபெற இருக்கிறது என்று சொல்லப்பட்டு வருகிறது.

 Leo

ஆனால் இதுகுறித்து அதிகார பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. முன்னதாக விஜய் - லோகேஷ் கனகராஜ் இணைந்து "மாஸ்டர்" படத்தில் களமிறங்கியிருந்தனர். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் "லியோ" படத்தில் இவர்கள் இருவரும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

கடந்த வாரம் "லியோ" படத்திற்கான விஜயின் போஸ்டர்கள் வெளியான நிலையில், ரசிகர்கள் படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகளுக்கு ஆர்வமாக காத்துள்ளனர். இதையடுத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டும் வகையில், லோகேஷ் ஒரு புது அப்டேட்டை வெளியிட உள்ளாராம்.

Leo

அதன்படி, இசை வெளியீட்டு விழாவிற்கு முன்பே இந்த அப்டேட் வெளியாகி விஜய் ரசிகர்களுக்கு கூஸ் பம்ப்பை ஏற்படுத்தும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. லோகேஷின் எல் சி யூ கான்செப்ட்டில் லியோ படம் உருவாகி உள்ளதாக லோகேஷ் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.